» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வேயில் 6,777 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள்: ஐடிஐ / பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

புதன் 19, ஆகஸ்ட் 2026 12:11:31 PM (IST)

வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (NFR) காலியாக உள்ள 6,777 அப்ரன்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 6,777

வயது வரம்பு: 19.08.2026 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/- (ஆன்லைனில் செலுத்த வேண்டும்).

(குறிப்பு: எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

கல்வித் தகுதி:

ஐடிஐ பிரிவுகளுக்கு: 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட பிரிவில் NCVT சான்றிதழுடன் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மெடிக்கல் லேப் டெக்னீசியன் (பேத்தாலஜி / ரேடியாலஜி): உயிரியல் (Biology) பாடப்பிரிவை முதன்மையாகக் கொண்டு +2 (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(சிறப்பு நிபந்தனை: கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை).
பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் (Trades):

பிட்டர், எலக்ட்ரீசியன், வயர்மேன், வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), மிஷினிஸ்ட், டர்னர், கார்பென்டர், பிளம்பர், மேசன், மெக்கானிக் டீசல், ஏசி & ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், COP-A, சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), சிஎன்ஆர் புரோகிராமர், செக்ரட்டரியல் அசிஸ்டென்ட், ஹெல்த் சேனிட்டரி இன்ஸ்பெக்டர், மெடிக்கல் லேப் டெக்னீசியன், ஸ்ட்ரக்சுரல் வெல்டர், டிக்/மிக் வெல்டர் மற்றும் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் அசிஸ்டென்ட்.
தேர்வு செய்யப்படும் முறை:

10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (மெடிக்கல் லேப் டெக்னீசியன் பிரிவுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில்) விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிகளின்படி மாதாந்திர உதவித்தொகை (Stipend) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை & கடைசி நாள்:

விண்ணப்பதாரர்கள் முதலில் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் www.nfr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.08.2026.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory