» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காலநிலை மாற்ற இயக்கத்தில் பணி இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:56:04 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடமான தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடமான தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் (Technical Staff / Field Staff ) பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு (Typewriting) திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.20,000/- வழங்கப்படும். இப்பணி 12 மாதங்கள் (1 ஆண்டு) முழுக்க ஒப்பந்த அடிப்படையிலானது. மாவட்ட காலநிலை மாற்ற இயக்க திட்டத்தின் கீழ் (District Climate Change Mission) மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு மேற்படி தகுதியுள்ள தனியர்களிடமிருந்து சுய விவர படிவங்கள் (CV) வரவேற்கப்படுகின்றன.
சுய விவரப் படிவங்களை மாவட்ட வன அலுவலர், மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு வருகின்ற 10.10.2024க்குள் விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 0461-2346600 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணியிடங்கள்: ஜன.31க்குள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 8:11:54 AM (IST)

ரயில்வே துறையில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்கள்: பிப்ரவரி 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:35:08 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)


