» சினிமா » செய்திகள்
ஜெயிலர் படத்தை விட நிஜத்தில் மாஸ்!- சிவராஜ்குமாருக்கு பார்த்திபன் பாராட்டு!!
சனி 30, செப்டம்பர் 2023 5:26:12 PM (IST)

ஜெயிலர் படத்தை விட நிஜத்தில் மாஸ் கிளப்பியுள்ளதாக கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஜெயிலர்’ படத்தில் கிளப்பிய Mass-ஐ விட, நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் சிவராஜ்குமாருக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் பிரகாஷ்ராஜுக்கும் பாராட்டு !!!! எதற்கு? மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள்.
நீண்ட(கால)காவேரி பிரச்னையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன? அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த ராஜ்குமாரின் வம்சாவழியும்,அவர்கள் பெரிதும் நேசிக்கும் சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது.
நீரின்றி அமையாது உலகு!- திருக்குறள் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். சித்தா திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வுக்காக நடிகர் சித்தார்த் நேற்று பெங்களூரு சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கன்னட அமைப்பினர் உள்ளே நுழைந்து, காவிரி விவகாரத்தைக் குறிப்பிட்டு தமிழ்ப் படங்களுக்கும் நடிகர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர்.
மேலும், கன்னட அமைப்பினர் அதிகம் கூடி ஆரவாரங்களை எழுப்பியதால் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில், நடிகர் சிவ ராஜ்குமார், "சினிமா நிகழ்ச்சியிலிருந்து சித்தார்த் வெளியேற்றப்பட்டது வேதனையளிக்கிறது. அனைத்து மொழிப்படங்களையும் பார்க்கக் கூடியவர்கள் கன்னடர்கள். அவர்கள் சார்பில் சித்தார்த்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள்: நயன்தாரா வேண்டுகோள்!
சனி 9, டிசம்பர் 2023 5:32:55 PM (IST)

இணையதளத்தில் சிவகார்த்திகேயன் படக்காட்சி கசிந்தது
வியாழன் 7, டிசம்பர் 2023 8:17:29 PM (IST)

தவறான நிர்வாகமே வெள்ள பாதிப்புக்கு காரணம்: சந்தோஷ் நாராயணன் கருத்து!
புதன் 6, டிசம்பர் 2023 5:46:06 PM (IST)

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)

மழைநீர் வடிகால் திட்டம் சிங்கப்பூருக்காகவா? சென்னைக்காகவா? நடிகர் விஷால் ஆவேஷம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:25:08 AM (IST)

மும்முட்டி - ஜோதிகா படத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு!
திங்கள் 4, டிசம்பர் 2023 11:57:43 AM (IST)
