» சினிமா » செய்திகள்

எங்கள் காவிரி எங்கள் உரிமை; கன்னட நடிகர்கள் குரல்!

சனி 23, செப்டம்பர் 2023 5:51:52 PM (IST)

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என உத்தரவிடப்பட்ட சூழலில், எங்கள் காவிரி எங்கள் உரிமை என்று கர்நாடக க தெரிவித்து உள்ளனர்.

காவிரி நீர் விவகாரத்தில், நடிகர் சுதீப் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், எங்களுடைய காவிரி எங்களுடைய உரிமையாக உள்ளது. பல கருத்தொருமித்த விசயங்களில் வெற்றி பெற்ற அரசானது, காவிரியில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களை கைவிடாது என நம்புகிறேன்.

உடனடியாக நிபுணர்கள் ஒரு செயல்திட்டம் வடிவமைத்து நீதி வழங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். நிலம், நீர், மொழிக்கான போராட்டத்தில் நானும் குரலெழுப்புகிறேன். கர்நாடகாவை காவிரி தாய் பாதுகாக்கட்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று நடிகர் தர்ஷன் தொகுதீபா வெளியிட்ட செய்தியில், கர்நாடகாவின் பங்கில் உள்ள காவிரி நீரை, கூடுதலாக பெறுவதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு, நிறைய தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது.நீர்ப்பாசன பகுதியில் நிறைய சேதம் ஏற்பட்டு உள்ளது. அதனால், அனைத்து விசயங்களையும் பரிசீலித்து, விரைவில் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை, அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா தர வேண்டும் என காவிரி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ள சூழலில் அவர்கள் இந்த பதிவை வெளியிட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory