» சினிமா » செய்திகள்

தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்.. கண்டித்த மன்சூர் அலிகான்!

புதன் 20, செப்டம்பர் 2023 3:49:43 PM (IST)

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியிடம் நடிகர் கூல் சுரேஷ் எல்லை மீறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், "கையில் ஒரு மாலையுடன் வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். 'எல்லோருக்கும் மாலை போட்டிங்க நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?" என அவர் பேசினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறு தான். அவருடைய செயலைக் கண்டு நானே அதிர்ச்சியடைந்தேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.

இதைத்தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூற, அந்த தொகுப்பாளினி 'நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என பதில் கொடுத்தார். தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி' என மன்னிப்பு கேட்டார். கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)


Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory