» சினிமா » செய்திகள்

ட்ரோல் எதிரொலி: போஸ்டரை நீக்கியது புராஜெக்ட் கே படக்குழு!

வியாழன் 20, ஜூலை 2023 12:42:15 PM (IST)



சமூக வலைதள ட்ரோல்கள் காரணமாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தின் பழைய போஸ்டரை நீக்கிவிட்டு, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் புராஜெக்ட் கே. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூலை 19) இப்படத்தில் பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மோசமான கிராஃபிக்ஸ் பின்னணியுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பழைய போஸ்டரை படக்குழு நீக்கியுள்ளது. 

அதற்கு பதில் இன்று அதிகாலை, சில மாற்றங்களுடன் புதிய போஸ்டர் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்களை மீம்களை பகிர்ந்து வருகின்றனர். ஆதிபுருஷ் படத்தின் முதல் டீசர் வெளியானபோது இதே போல மோசமான கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கடும் ட்ரோல்களை எதிர்கொண்டு பின்னர் பல மாற்றங்களுடன் படம் வெளியானது நினைவுகூரத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory