» சினிமா » செய்திகள்

லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

வியாழன் 22, ஜூன் 2023 10:37:46 AM (IST)



லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிக்கும் "லியோ" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் லியோ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நடிகர் விஜய்-யின் பிறந்த நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி உள்ளது. இதனை அதன் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory