» சினிமா » செய்திகள்

ராமராஜன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

வியாழன் 15, ஜூன் 2023 4:14:23 PM (IST)



சாமானியன் படத்தினை தொடர்ந்து ராமராஜன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது..

1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்தார். அதையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது ‘சாமானியன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை ‘சாமானியன்’ படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குகிறார். படத்தின் இளையராஜா இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் கார்த்திக் குமார் கூறும்போது, "நான் எழுதியிருந்த சாமானியன் கதை ராமராஜனுக்கு மிகவும் பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப் படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன்.

உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்தப் படத்தின் மூலம் நான் இயக்குநராகவும் மாறி உள்ளேன். சமூக பிரச்சினையை மையப்படுத்தியே இந்த படம் இருக்கும்.

இந்தப் படத்தில் நடிகர் ராமராஜன் ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார்.ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory