» சினிமா » செய்திகள்

தி கேரளா ஸ்டோரி பட இயக்குநருடன் கைகோர்த்த ஏ.ஆர். ரஹ்மான்!

திங்கள் 12, ஜூன் 2023 5:34:05 PM (IST)



பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி பட இயக்குநரின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் படம் இயக்கவுள்ளார். பிரபல தொழிலதிபரும் சகாரா குழுமத் தலைவருமான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை 'சஹாரா ஸ்ரீ’ (SAHARASRI) என்ற தலைப்பில் படமாக இயக்கவுள்ளார். 

இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சந்தீப் சிங் தயாரிக்கிற இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சுப்ரதா ராய், தனது நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தவறியதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்பு டெல்லி திகார் ஜெயிலில் 2 வருடம் சிறைத் தண்டனை பெற்று பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்', ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory