» சினிமா » செய்திகள்

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

சனி 15, ஏப்ரல் 2023 4:50:35 PM (IST)



மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை  படம் தேர்வாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் கடந்த 2021-ல் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. இதில் ஆர்யா ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து இருந்தார். 1960-களில் வட சென்னை பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே நடந்த குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. இதில் ஆர்யா கடும் உடற்பயிற்சிகள் மூலம் தேகத்தை கட்டுடலாக மாற்றி நடித்து இருந்தார். 

படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. திரை பிரபலங்களும் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்து படக் குழுவினரை பாராட்டினர். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு சார்பட்டா பரம்பரை படம் தேர்வாகி உள்ளது. இதனை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளனர். இந்த விழா மாஸ்கோவில் வருகிற 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்க உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory