» சினிமா » செய்திகள்

விருந்துக்கு சென்ற இடத்தில் நண்பர்கள் அட்டூழியம் : போலீசில் நடிகை புகார்!!

சனி 15, ஏப்ரல் 2023 4:43:49 PM (IST)

விருந்துக்கு சென்ற இடத்தில் தனது ஐபோனை நண்பர்கள் திருடிவிட்டதாக பிரபல நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்று வாங்கியுள்ளார். கடந்த 9-ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார். மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory