» சினிமா » செய்திகள்

கர்நாடக தேர்தல்: இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு!

வியாழன் 13, ஏப்ரல் 2023 11:49:36 AM (IST)

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சிக்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய கட்சிகள் இறுதி செய்து அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கலான் படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் முகாமிட்டிருந்த இயக்குநர் ரஞ்சித்,

கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரனை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக சார்பில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தநிலையில் அத்தொகுதியை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். கோலார் தங்கவயலில் உள்ள ராபர்ட்சன் பேட்டை, மாரிக்குப்பம், சாம்பியன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்து வருகிறார். இது பற்றி பா.ரஞ்சித் கூறுகையில், ”கோலார் தங்கவயல் தொகுதி இந்தியக் குடியரசு கட்சியின் சொந்த‌ தொகுதி. இந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பல முறை வெற்றிப் பெற்றுள்ளனர்.

தற்போது இந்தத் தொகுதியை இந்தியக் குடியரசு கட்சி இழந்துள்ளது. இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றும் சூழல் தற்போது அமைந்துள்ளது. கோலார் தங்கவயல் தமிழர்கள் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.எனவே, தங்கவயல் மக்கள் எஸ்.ராஜேந்திரனை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் ரீதியாக பா.ரஞ்சித் எந்த கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக இதுவரை பேசியது இல்லை. எந்த கட்சியின் உறுப்பினராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஞ்சித் படப்பிடிப்புக்காக கர்நாடகா மாநிலம் சென்றவர் அங்கு அரசியல் ரீதியாக குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது விவாதப்பொருளாகி வருகிறது.


மக்கள் கருத்து

இவன்Apr 13, 2023 - 05:53:52 PM | Posted IP 162.1*****

ஜாதி வெறியன் .

இவன் ஒரு அரைவேக்காடுApr 13, 2023 - 03:40:51 PM | Posted IP 162.1*****

இவர் ஆதரவு கொடுத்தால் எதிர் கட்சிகள் அனைவரும் டெபாசிட் இழந்துவிடுவார்கள்....

Yar ivar?Apr 13, 2023 - 12:53:10 PM | Posted IP 162.1*****

aamam yar ivar??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory