» சினிமா » செய்திகள்

தர்பார் படம் தோல்வி ஏன்? ஏஆர் முருகதாஸ் விளக்கம்

புதன் 5, ஏப்ரல் 2023 11:42:16 AM (IST)

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 

அதில் 'தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' ஆகிய வெற்றிப் படங்களும் அடக்கம். அதே சமயம் 'ஸ்பைடர், தர்பார்' என இரண்டு தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். இவற்றில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் தோல்வி யாரும் எதிர்பாராத ஒன்று.

கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காத ஏஆர் முருகதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'தர்பார்' படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார். "ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு பிப்ரவரி மாதம் கிடைக்கிறது. ஜுன் மாதம் மும்பையில் மழைக்காலம். அதற்குள் படத்தை முடிக்க வேண்டும், ஆகஸ்ட் மாதம் அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள். நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அந்தப் படத்தை எந்தக் காரணம் கொண்டும் நான் மிஸ் பண்ண விரும்பல.

அன்றைய சூழ்நிலையில் அந்தப் படம்தான் ரஜினி சாரின் கடைசிப் படம் என்று பேசப்பட்டது. அடுத்து அவர் அரசியல் பக்கம் போகப் போகிறார் என்பதே அதற்குக் காரணம். பிப்ரவரியில் வாய்ப்பு கிடைத்து மார்ச் மாதம் ஷுட்டிங் போயி, ஜுனுக்குள் படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை. எப்படியாவது ரஜினி சாரை வச்சி படத்தை ஹிட் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாம படம் தோல்வியடைஞ்சு போச்சு. ஷுட்டிங் முன்னாடி நமக்கு நிறைய டைம் வேணும். அந்த டைம் லிமிட்டுக்குள்ள படம் பண்ணணும்கறது எனக்கு தோல்வியைத் தந்தது,” என்று சொல்லியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory