» சினிமா » செய்திகள்

என்னுடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும்: சிவகார்த்திகேயன்

புதன் 29, மார்ச் 2023 4:33:20 PM (IST)

"என்னுடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும். அது திட்டமிட்டு வருவதில்லை.” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ‘மாவீரன்’ திரைப்படம் திரைக்கு வரும். அது தான் என்னுடைய அடுத்த ரிலீஸ். மாவீரன் படத்தின் கதைக்களம் எனக்கு மிகவும் புதிதாகவும் சவாலாகவும் இருந்தது. என்னுடைய நடிப்பில் ரஜினியின் சாயல் இருக்கும். அது திட்டமிட்டு வருவதில்லை. இயல்பாகவே வந்துவிடுகிறது.

நம்முடைய குறும்படம் ஒன்றுக்கு ஆஸ்கர் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்கர் என்பது நமக்கு வெறும் செய்தியாக இருந்தது. அதனை நிஜமாக்கியது ஏ.ஆர்.ரஹ்மான். அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் நிறைய இருக்கிறது, நாமும் சாதிக்க முடியும் என யோசிக்கும்போது பெரிய உத்வேகமாக இந்த விருது அமைந்துள்ளது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory