» சினிமா » செய்திகள்

காணாமல் போன நாயை கண்டுபிடித்தால் 10 ஆயிரம் டாலர் பரிசு அறிவித்த நடிகை

புதன் 28, செப்டம்பர் 2022 12:06:31 PM (IST)

காணாமல் போன தனது நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசாக வழங்குவேன்" என்று பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான பாரிஸ் ஹில்டன் தெரிவித்து உள்ளார். 

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான பாரிஸ் ஹில்டன் செல்லப்பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். அவரது வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். ஒவ்வொரு நாய்க்கும் பெயர் வைத்து அழைத்து ஓய்வு நேரத்தை அவற்றோடுதான் கழிக்கிறார். இந்த நிலையில் டைமண்ட் என்று பெயர் வைத்து அவர் வளர்த்து வந்த நாயை ஒரு வாரமாக காணவில்லை. இதனால் நொறுங்கி போய் இருக்கும் பாரிஸ் ஹில்டன் நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெரிய தொகையை பரிசாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் பாரிஸ் ஹில்டன் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது டைமண்ட் என்ற செல்ல நாயை காணவில்லை. இதனால் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். அந்த நாயை கொண்டு வந்து கொடுத்தாலோ அல்லது அதை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தாலோ எந்த கேள்வியும் கேட்காமல் 10 ஆயிரம் டாலர் பரிசாக வழங்குவேன்" என்று தெரிவித்து உள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 555 ஆகும். பாரிஸ் ஹில்டன் பதிவு வலைத்தளத்தில் வைரலாகிறது. அதை பார்த்த பலரும் ஒரு நாய்க்கு இவ்வளவு லட்சமா என்று வியப்பை வெளியிட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory