» சினிமா » செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:58:09 AM (IST)

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
'மண்டேலா' பட இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கும் புதிய படம் 'மாவீரன்'. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'டான்' படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் ரிலீஸுக்காக தயாராக இருக்கிறது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:14:52 PM (IST)

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:31:07 PM (IST)

பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:41:58 PM (IST)

எங்கள் காவிரி எங்கள் உரிமை; கன்னட நடிகர்கள் குரல்!
சனி 23, செப்டம்பர் 2023 5:51:52 PM (IST)

சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல் ரிலீஸ்!
சனி 23, செப்டம்பர் 2023 5:09:01 PM (IST)
