» சினிமா » செய்திகள்

தவறான சிகிச்சையால் முகம் வீங்கிய நடிகை: மருத்துவர் மீது புகார்!

செவ்வாய் 21, ஜூன் 2022 11:37:00 AM (IST)

பெங்களூருவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் நடிகையின் முகம் வீங்கியுள்ளது. 

கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ஸ்வாதி சதிஷ். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் வரிசை சிகிச்சைக்காக சென்றுள்ளார்.  சிகிச்சைக்கு பிறகு அவருக்கு முகத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள் 2 அல்லது 3 நாட்களில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். னால் நாளடைவில் முகம் வீங்கியபடியே இருந்துள்ளது. 

இதனையடுத்து ஸ்வாதி மருத்துவமனையின் மீதும் மருத்துவம் பார்த்த மருத்துவரின் மீதும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் கன்னட திரையுலகில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 21 வயதான கன்னட நடிகை சேத்தனா ராஜ் தவறான சிகிச்சையால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory