» சினிமா » செய்திகள்

'லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு ரோலெக்ஸ்..., அனிருத்துக்கு கமல் கொடுத்த பரிசு என்ன?

புதன் 15, ஜூன் 2022 4:06:52 PM (IST)லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் பரிசளித்த, கமல் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்ற ரசிகரின் கேள்விக்கு, அனிருத் சாமர்த்தியமாக பதிலளித்தார்.  

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. விக்ரம் படத்தின் காரணமாக இந்த மாதம் வெளியாகவிருந்த ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை, பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய படங்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

படத்தில் அனிருத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திரையரங்குக்கு இயக்குநர் லோகேஷ் மற்றும் அனிருத் சென்று ரசிகர்களை சந்தித்தனர்.  அப்போது ரசிகர் ஒருவர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சும் பரிசளித்தார். உங்களுக்கு என்ன கொடுத்தார் என அனிருத்திடம் கேட்டார். அதற்கு அனிருத், கமல் சார் எனக்கு விக்ரம் கொடுத்தார் என்று அதிரடியாக பதிலளித்தார். அவரது பதில் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory