» சினிமா » செய்திகள்

திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் - விஜய் சந்திப்பு

வியாழன் 7, ஏப்ரல் 2022 12:11:18 PM (IST)



சென்னையில் திருமண விழா ஒன்றில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்து பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் கல்பாத்தி எஸ் அகோரம் இல்ல திருமண விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் நடிகர் விஜய். மணமக்களை வாழ்த்திவிட்டு, வெளியேறும்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்தார். முதல்வர் ஸ்டாலின் வருவதை அறிந்த விஜய், அங்கேயே நின்று அவரை வரவேற்றார். 

ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து இருவரும் சில நிமிடங்களில் பேசிக்கொண்டனர். பின்னர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார் விஜய். நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கும் அவரது 66-வது படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். தமன் இசையமைக்க உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory