» சினிமா » செய்திகள்

பாஸ்போர்ட் மோசடி: முன்னாள் மனைவி மீது இமான் பரபரப்பு புகார்!!

செவ்வாய் 5, ஏப்ரல் 2022 12:32:12 PM (IST)

முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். இவர் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்நிலையில், டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இது தொடர்பாக இமான் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது இரண்டு மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் இருக்கிறது. ஆனால் மோனிகா அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா இருவரும் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory