» சினிமா » செய்திகள்

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை: அஜித் விளக்கம்

புதன் 2, மார்ச் 2022 5:12:43 PM (IST)

நடிகர் அஜித், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என அஜித் தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.  இந்த படம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது.  

நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்றே நினைக்கின்றேன் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் தெரிவித்து இருந்ததாக பிரபல தனியார் தொலைகாட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. 

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், நடிகர் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory