» சினிமா » செய்திகள்

ரஷியாவில் “தி பேட்மேன்” படம் வெளியாகாது : வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்

செவ்வாய் 1, மார்ச் 2022 5:23:04 PM (IST)



தி பேட்மேன் திரைப்படம் தற்போதைக்கு ரஷ்யாவில் வெளியாகாது என வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான "தி பேட்மேன்” அமெரிக்கா , ரஷியா உட்பட பல வெளிநாட்டுகளில் மார்ச் 4 [வெள்ளிக்கிழமை] வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது . உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனக்குரல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளும் ரஷிய நிறுவனங்களுக்கு தடை விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷியாவில் வார்னர் பிரதர்ஸ் தி பேட்மேனின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "உக்ரைனில் நெருக்கடியான நேரத்தை கருத்தில் கொண்டு, வார்னர் மீடியாவின் திரைப்படமான தி பேட்மேன் ரஷியாவில் தற்போதைக்கு வெளியிடப்படாது. இந்த சோகத்திற்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”. என தெரிவித்தார். இதேபோல் வால்ட் டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ் ரஷியாவில் தங்கள் படங்களின் வெளியீட்டை "தற்காலிகமாக நிறுத்துவதாக" தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory