» சினிமா » செய்திகள்

வலிமை ரிலீஸ்.. போனி கபூருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

வியாழன் 24, பிப்ரவரி 2022 3:03:10 PM (IST)



வலிமை படத்தை பார்க்க வந்த தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் ரசிகர்கள் பாலபிஷேகத்துடன் புதுவிதமாக வரவேற்பு அளித்தனர். 

அஜித், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் நடனம் ஆடியும் கட்-அவுட் வைத்தும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தயாரிப்பாளர் போனி கபூரை ரசிகர்கள் பாலபிஷேகத்துடன் வரவேற்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் ரசிகர்கள் அவர்களுடைய சந்தோஷத்தை விதவிதமாக வெளிப்படுத்திவருகின்றனர். போனி கபூரை பாலபிஷேகத்துடன் வரவேற்திருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory