» சினிமா » செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி மரணம்

வியாழன் 17, பிப்ரவரி 2022 8:52:30 AM (IST)

பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல் நலக்குறைவால் காலமானார். 

பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி. இவர் தங்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தங்க நகைகள் அதிகம் அணிந்து காணப்படுவார் அதுதான் இவரின் அடையாளம். ஏராளமான தேன் சொட்டும் பாடல்களை இவர் ஹிந்தியில் கொடுத்துள்ளார். காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்த பப்பிலஹரி தமிழில் நாகேஷ் தயாரிப்பில் ஆனந்த் பாபு நடித்த பாடும் வானம்பாடி படத்தில் இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கும் வந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. நள்ளிரவுக்கு சற்று முன்பு மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory