» சினிமா » செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!

சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற திரைப்படத் துறை கலைஞர்களுக்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருவதில், 2019, 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறவிருக்கும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சவுக்கார் ஜானகி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு, ஐசரிகணேஷ், இயக்குனர் கெளதம்மேனன், இசையமைப்பாளர் டி.இமான், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்பட அனைத்து திரைப்படத் துறை கலைஞர்களுக்கும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக என்னுடன் 27 ஆண்டுகளாக பயணிக்கும் PRO திரு.சிங்காரவேலு அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன்.தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பற்பல புதிய படைப்புகளுடன் சாதனைகள் புரிந்து திரைத்துறையை மென்மேலும் வளர்ச்சியடைய செய்யவும் வாழ்த்துகிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory