» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அபிஷேக் சர்மா அதிரடி : 44-வது முறையாக 200+ ரன்கள் குவித்து இந்தியா வெற்றி!

வியாழன் 22, ஜனவரி 2026 10:27:37 AM (IST)


நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் மூலம்  சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் இந்​திய அணி இது 44-வது முறையதக ​200 ரன்​களுக்கு மேல் குவித்தது.

இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 5 ஆட்டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடை​பெற்​றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது.

தனது 7-வது அரை சதத்தை கடந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 8 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 22 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​களும், ஹர்​திக் பாண்​டியா 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும் சேர்த்​தனர்.

இறு​திக்​கட்ட ஓவர்​களில் ரிங்கு சிங் அதிரடி​யாக விளையாடி 20 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்​கள் விளாசி​னார். சஞ்சு சாம்​சன் 10, இஷான் கிஷன் 8, ஷிவம் துபே 9, அக்​சர் படேல் 5 ரன்களில் நடையை கட்​டினர்.

சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் இந்​திய அணி 200 ரன்​களுக்கு மேல் குவிப்​பது இது 44-வது முறை​யாகும். நியூஸிலாந்​துக்கு எதி​ராக மட்டும் 5-வது முறை​யாக 200 ரன்​களுக்கு மேல் வேட்​டை​யாடி உள்ளது.

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. முதல் இரண்டு ஓவர்களில் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 78 மற்றும் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தனர். மிட்செல் 28, ராபின்சன் 21 மற்றும் சான்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர்.

அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் வருண் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தாள் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை

திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory