» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!

சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)



ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் புகைப்படத்தில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடர், மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் நிறைவடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் (89 ரன்கள்), அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 255 ரன்கள் குவித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாக்-அவுட் சுற்றுகள் அனைத்திலும் அபாரமாகச் செயல்பட்ட சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்குத் தலைவர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஷுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டிருந்த இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டப் புகைப்படத்தில், தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் மட்டும் இடம்பெறாதவாறு ‘எடிட்’ செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக 'எக்ஸ்' (X) தளத்தில் புகைப்படங்களை ஒப்பிட்டுப் பதிவிட்டு வரும் ரசிகர்கள், "இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சக வீரரை இவ்வாறு புறக்கணிக்கலாமா?" என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், கில்லுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். "வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்படும்போது சஞ்சு சாம்சன் மறைந்திருக்கலாம், இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

நடப்பு டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான அணியிலிருந்து ஷுப்மன் கில் நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாகத் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்ற நிலையில், அந்த விரக்தியிலேயே கில் இவ்வாறு செய்திருக்கலாம் என ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory