» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சி.எஸ்.கே.வை வீழ்த்தினால் மட்டும் கோப்பை கிடைக்காது - ஆர்சிபி அணியை விமர்சித்த ராயுடு!
வியாழன் 23, மே 2024 12:08:15 PM (IST)
"ஐபிஎல் கோப்பை சி.எஸ்.கே.வை வீழ்த்தி பெறுவது அல்ல" என்று ஆசிபி அணியை சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார்.

முன்னதாக சென்னை - பெங்களூரு இடையே நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில், பெங்களூரு வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனை பெங்களூரு வீரர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். அந்த போட்டியின்போது வர்ணனையாளர் பிரிவில் இடம் பெற்றிருந்த சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பெங்களூரு அணியை அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு:- "ஐபிஎல் கோப்பைகள் கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை. ஐபிஎல் கோப்பை சி.எஸ்.கே.வை வீழ்த்தி பெறுவது அல்ல. ஐ.பி.எல். கோப்பையை வெல்ல நீங்கள் பிளே ஆப்களில் நன்றாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அசுதோஷ் சர்மா அபாரம் : லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:36:00 AM (IST)

ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் முதல் சதம் : ஹைதராபாத் அணி புதிய சாதனை!
திங்கள் 24, மார்ச் 2025 12:32:41 PM (IST)

ருதுராஜ், ரச்சின் அபாரம் : மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது சென்னை!
திங்கள் 24, மார்ச் 2025 10:41:49 AM (IST)

ஐபிஎல் 2025 முதல் டி20 போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஞாயிறு 23, மார்ச் 2025 10:07:48 AM (IST)

சர்வதேச டி20 போட்டியில் அதிவேக விரட்டல்: பாகிஸ்தான் அணி உலக சாதனை!
சனி 22, மார்ச் 2025 12:30:19 PM (IST)

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் : பென் டக்கெட் சவால்
வியாழன் 20, மார்ச் 2025 12:26:34 PM (IST)
