» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோவில்பட்டியில் தென் மண்டல ஹாக்கிப் போட்டி தொடக்கம்
சனி 20, ஜூலை 2024 3:43:46 PM (IST)

கோவில்பட்டியில் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தென் மண்டல ஹாக்கிப் போட்டி நேற்று தொடங்கியது.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜன் தொடங்கி வைத்தார். இப் போட்டியில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. காலிறுதி போட்டி வரை லீக் முறையிலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக்அவுட் முறையிலும் நடைபெறும்.
முதல் லீக் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி 7-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி கார்மல் பள்ளி அணியை தோற்கடித்தது. 2ஆவது போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி அணி 6-2 என்ற கோல் கணக்கில் சிவகங்கை செயின்ட். ஜோசப் மேல்நிலை பள்ளி அணியை வீழ்த்தியது. 3ஆவது லீக் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி 11-1 என்ற கோல்கணக்கில் பாளையங்கோட்டை எம். என். அப்துர் ரஹ்மான் அணியை தோற்கடித்தது. 4ஆவது லீக் போட்டியில் சிவகங்கை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி 8-0 என்ற கோல் கணக்கில் தென்காசி எஸ். பி. கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் தென் மண்டல ஹாக்கிப் போட்டிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.
தொடக்க விழாவில், கோவில்பட்டி விளையாட்டு விடுதி மேலாளர் ரோஸ் பாத்திமா மேரி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பாலசிங்கம், மேலாளரும் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலர் குரு சித்ர சண்முக பாரதி, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, போட்டி துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)
