» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெங்களூரு அணியை வெளியேற்றியது ராஜஸ்தான்!

வியாழன் 23, மே 2024 11:36:08 AM (IST)'எலிமினேட்டர்' போட்டியில் அசத்திய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பெங்களூரு அணி பரிதாபமாக வெளியேறியது.

ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., 'எலிமினேட்டர்' போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 'பீல்டிங்' தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு கேப்டன் டுபிளசி (17) சுமாரான துவக்கம் தந்தார். விராத் கோலி (33), கிரீன் (27) நம்பிக்கை தந்தனர். மேக்ஸ்வெல் (0) ஏமாற்றினார். தினேஷ் கார்த்திக் (11) சோபிக்கவில்லை. ரஜத் படிதர் (34), லாம்ரர் (32) ஓரளவு கைகொடுத்தனர். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், காட்மோர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. யாஷ் தயாள் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரி விரட்டினார் ஜெய்ஸ்வால். சிராஜ், யாஷ் தயாள் ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த காட்மோர் (20), பெர்குசன் பந்தில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் 45 ரன் எடுத்தார். சஞ்சு சாம்சன் (17) நிலைக்கவில்லை.

துருவ் ஜுரெல் (8) 'ரன்-அவுட்' ஆனார். பின் இணைந்த ரியான் பராக் (36), ஷிம்ரன் ஹெட்மயர் (26) ஜோடி கைகொடுத்தது. பெர்குசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பாவெல் வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாவெல் (16) அவுட்டாகாமல் இருந்தார். 'எலிமினேட்டரில்' வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, நாளை சென்னையில் நடக்கும் தகுதிச் சுற்று-2ல் ஐதராபாத் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, பைனலில் (மே 26, சென்னை) கோல்கட்டாவை எதிர்கொள்ளும்.

பெங்களூருவின் கோலி, தனது 29வது ரன்னை எட்டிய போது ஐ.பி.எல்., அரங்கில் 8000 ரன் எடுத்த முதல் வீரரானார். இதுவரை 252 போட்டியில், 8 சதம் உட்பட 8004 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் தவான் (6769 ரன்) உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் சாய்த்த ராஜஸ்தான் பவுலரானார் சகால். இதுவரை 66 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த இடத்தில் சித்தார்த் திரிவேதி (65 விக்கெட்) உள்ளார்.

ஐ.பி.எல்., அரங்கில் அதிகமுறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டார் மேக்ஸ்வெல். இருவரும் தலா 18 முறை இப்படி ஆட்டமிழந்தனர். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (17 முறை) உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory