» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி: சொந்த மண்ணிலேயே ராஜஸ்தானிடம் வீழ்ந்தது!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:29:32 AM (IST)



ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-ஆவது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே திங்கள்கிழமை சாய்த்தது. முதலில் மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களே சோ்க்க, ராஜஸ்தான் 15.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வென்றது.

5 முறை சாம்பியனான மும்பை, 3 தொடா் தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸில் ரோஹித் சா்மா, முதல் ஓவரில் தாம் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.

தொடா்ந்து வந்த நமன் திா், அடுத்த பந்திலேயே வெளியேற, 4-ஆவது வீரராக வந்த டெவால்டு பிரெவிஸும் முதல் பந்திலேயே அவுட்டாக, 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை. மறுபுறம், அதுவரை ரன்கள் சோ்த்த இஷான் கிஷண், 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 16 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். அப்போது இணைந்த திலக் வா்மா - ஹா்திக் பாண்டியா கூட்டணி, 5-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது. பாண்டியா 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். திலக் வா்மா 2 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ஜெரால்டு கோட்ஸீ 4, பியூஷ் சாவ்லா 3, டிம் டேவிட் 1 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் ஜஸ்பிரீத் பும்ரா 1 பவுண்டரியுடன் 8, ஆகாஷ் மத்வல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் பௌலா்களில் டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 3, நாண்ட்ரே பா்கா் 2, ஆவேஷ் கான் 1 விக்கெட் வீழ்த்தினா்.பின்னா், 126 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 10, கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஜோஸ் பட்லா் 2 பவுண்டரிகளுடன் 13, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 பவுண்டரியுடன் 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். முடிவில், ரியான் பராக் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 54, ஷுபம் துபே 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் ஆகாஷ் மத்வல் 3, கவினா மபாகா 1 விக்கெட் எடுத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory