» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிப்.25ல் ஒன்றிய அளவிலான கபடி போட்டிகள்: அணியை பதிவு செய்து கொள்ளலாம்!!!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 4:42:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் சாத்தான்குளம் ஒன்றிய அளவிலான கபடி போட்டிகள் பிப். 25ஆம் தேதி நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ண அறிவுறுத்தலின் படி சாத்தான்குளம் ஒன்றிய அளவிலான கபடி போட்டிகள் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்து பிப். 25ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 

போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய், மூன்றாவது மற்றும் நான்காம் பரிசு 5000 ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது. இப்போட்டி மூலம் தேர்வாகும் 12 வீரர்கள், மார்ச் 2,3ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். 

இதில் பங்கேற்க விரும்பும் கபடி வீரர்கள் ஒன்றிய பொறுப்பாளரிடம் அணி பதிவு விண்ணப்பம் ரூ500 செலுத்தி தங்கள் அணியை பதிவு செய்து கொள்ளலாம். வீரர்களின் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் ஒரு நபருக்கு ரூபாய் 50 செலுத்த வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2, ஆதார் அட்டை நகல் - 1 கொண்டு வர வேண்டும். பிப். 23ஆம்தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். துறை சார்ந்த வீரர்கள் விளையாட அனுமதி இல்லை.

கபடி அணி தலைவர்கள் தங்களுடைய அணிகளை பதிவு செய்து பயன் பெற வேண்டும் பதிவு செய்ய விரும்புபவர்கள் உடற்கல்வி இயக்குநர்கள் சந்திரசேகர், அகஸ்டின்,மணிகண்டன் ஆகியோரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அமெச்சூர் கபடி கழக சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வேணுகோபால், சாமுவேல் பொன்னையா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory