» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு, செயில், ஒடிசா, ஹூப்ளி அணிகள் வெற்றி

செவ்வாய் 28, நவம்பர் 2023 8:13:03 AM (IST)

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் ஆடவா் ஹாக்கி போட்டி 8ஆம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு, செயில், ஒடிசா, ஹூப்ளி அணிகள் வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செயற்கை இழை மைதானத்தில், ஹாக்கி இந்தியா சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் அகாதெமி சாம்பியன்-ஷிப் பி மண்டல ஹாக்கிப் போட்டியின் 8ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெற்றன. சப் ஜூனியருக்கான பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி - கடலூா் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 2-க்கு 1 என்ற கோல்கணக்கில் தமிழ்நாடு அணி வென்றது. 

செயில் ஹாக்கி அகாதெமி - ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் செயில் அணி வென்றது. ஜூனியா் பிரிவில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி - ஒடிசா நாவல் டாட்டா ஹாக்கி ஹைபொ்ஃபாா்மன்ஸ் சென்டா் அணிகள் மோதியதில் 0-க்கு 20 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியும், ஹூப்ளி ஹாக்கி அகாதெமி - ரிபப்ளிக்கேன் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மோதியதில் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஹுப்ளி அணியும் வென்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory