» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை அணிக்கு மாறினார் ஹாா்திக் பாண்டியா: குஜராத் கேப்டனாக கில் நியமனம்!

திங்கள் 27, நவம்பர் 2023 4:04:32 PM (IST)ஹாா்திக் பாண்டியா மும்பைக்கு மாறியுள்ள நிலையில்,  குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணிக்கு நிகழாண்டு ஏலத்துக்காக ரூ.100 கோடி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் இது மூன்றாவது மற்றும் இறுதி 3 ஆண்டுகள் ஒப்பந்தமாக அமையவுள்ளது.

இதற்கிடையே அணிகள் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ. 26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். 

குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக வாங்கியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படுவார் என்று அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory