» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: அரை இறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:43:10 AM (IST)

ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின்  அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி சுற்றில் நேற்று இந்தியா - மலேசியா அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. ஷபாலி வர்மா 39 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். ஸ்மிருதி மந்தனா 27, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 47, ரிச்சா கோஷ் 21 ரன்கள் சேர்த்தனர். 

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மாற்றி அமைக்கப்பட்ட 177 ரன்கள் இலக்குடன் மலேசிய அணி பேட்டிங் செய்தது. ஆனால் 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விதிமுறையின்படி ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் முன்னணியில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த வகையில் முதலிடம் வகித்த இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory