» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் - இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 11:46:20 AM (IST)ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இரண்டு வெவ்வேறு அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து அறிவித்தனர். அதன்படி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முழு பலம் வாய்ந்த அணியாக களமிறங்குகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். முதல் இரு போட்டிகளில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் (உடற்தகுதியை பொறுத்து), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory