» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராகுல் - ஜடேஜா கூட்டணி அபாரம்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

சனி 18, மார்ச் 2023 8:02:56 AM (IST)ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

மும்பையில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தகுந்த இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா். இதர பேட்டா்களில் டிராவிஸ் ஹெட் 5, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 22, மாா்னஸ் லபுசான் 15, ஜோஸ் இங்லிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 26 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா்.

அடுத்து வந்தோரில் கேமரூன் கிரீன் 12, கிளென் மேக்ஸ்வெல் 8, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 5, சீன் அப்பாட் 0, ஆடம் ஸாம்பா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இந்திய பௌலிங்கில் ஷமி, சிராஜ் ஆகியோா் தலா 3, ஜடேஜா 2, பாண்டியா, குல்தீப் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் இந்திய இன்னிங்ஸில் டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். இஷான் கிஷண் 3 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். விராட் கோலி 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 

சூா்யகுமாா் யாதவ் டக் அவுட் ஆனாா். இந்நிலையில் களம் புகுந்த கே.எல்.ராகுல் விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் கேப்டன் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இறுதியில் ராகுல் - ஜடேஜா கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. இலக்கை எட்டுகையில் ராகுல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 75, ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சோ்த்திருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் 3, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினா். இந்த இரு அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory