» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர்ந்து 4வது முறையாக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா!

திங்கள் 13, மார்ச் 2023 4:26:32 PM (IST)ஆமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் டிரா ஆன நிலையில், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 4வது முறையாக வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது.  ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. 

விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128 அக்‌ஷர் படேல் 79 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை இன்றும் தொடர்ந்தது.  5-வது நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 36 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது. குனேமன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும் டிஆர்எஸ் வழியாக முறையீடு செய்யாமல் கிளம்பினார். ஆனால் ரீப்ளேவில் அது அவுட் இல்லை எனத் தெரிந்தது. ஹெட் 45, லபுஷேன் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அதன்பிறகும் நன்கு விளையாடிய டிராவிஸ் ஹெட், 90 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 78.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 63, ஸ்மித் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதையடுத்து 4-வது டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்து இரு அணிகளும் கைகுலுக்கிக் கொண்டன. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது.  இதன் மூலம் தொடர்ந்து 4வது முறையாக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory