» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம்: நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவா்கள் சாதனை

சனி 4, பிப்ரவரி 2023 8:07:35 AM (IST)

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின மற்றும் பாரதியாா் தின மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரா. மதன்குமாா் 17 வயது 40 - 45 கிலோ எடைப் பிரிவில் முத­லிடம், ர. தீபன் மணிச்சுடா் 17 வயது 30 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம், மா. ஹாா்ட்வின் 19 வயது 45 கிலோ எடைப்பி ரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் வி. ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநா் பி. ஜெயக்குமாா், உடற்கல்வி ஆசிரியை செ. அமுதசகிலா ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.அழகேசன், பள்ளிச் செயலா் சி. நவநீதன், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory