» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் : சாத்தான்குளம் மாணவன் அசத்தல்!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:52:08 AM (IST)



அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் சாத்தான்குளம் மாணவன்  தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர் .  இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-  இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர்  ரென்ஷி.   சுரேஷ்குமார் செயல்பட்டார். 

இதில் தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் ஆரோன் ஜெபஸ் என்கின்ற மாணவன்  15 வயதுக்குட்பட்டோருக்கான  கட்டா  பிரிவில்  தங்க பதக்கத்தை வென்றான். வெற்றி பெற்ற மாணவனை திருவைகுண்ட  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory