» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஹார்திக் பாண்டியா கேப்டன்

வியாழன் 16, ஜூன் 2022 10:39:22 AM (IST)

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்து செல்கிறது. அங்கு ஜூன் 26 மற்றும் ஜூன் 28-ல் இரண்டு ஆட்டங்கள் அடங்கிய டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வீரர்கள் டி20 தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, தென் ஆப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக விளையாடாத கேஎல் ராகுல் மற்றும் கேப்டனாக வழிநடத்தும் ரிஷப் பந்த் பெயர்கள் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: ஹார்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory