» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஞ்சி போட்டியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: மும்பை அணி புதிய சாதனை!

வெள்ளி 10, ஜூன் 2022 11:08:37 AM (IST)ரஞ்சிக் கோப்பை போட்டியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை அணி புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை. 87-வது சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் வாக்கில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இப்போது நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது. இதில் இரண்டாவது காலிறுதியில் மும்பை மற்றும் உத்தராகண்ட் அணிகள் விளையாடின. போட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் ஆளூர் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. 647 மற்றும் 261 ரன்கள் இரண்டு இன்னிங்ஸில் குவித்தது அந்த அணி. உத்தராகண்ட் 114 மற்றும் 69 ரன்களை மட்டுமே இரண்டு இன்னிங்ஸிலும் எடுத்தது. அதனால் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை. இந்த வெற்றியின் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் மும்பை அணி புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் முதல்தர கிரிக்கெட்டில் 685 ரன்கள் வித்தியாசத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணி பெற்றிருந்த வெற்றியே அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது. கடந்த 1930 வாக்கில் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிராக இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டது. இப்போது அதை மும்பை அணி தகர்த்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory