» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

கரோனா காலத்திலும் வ.உ.சி துறைமுகம் 31.79 மில்லியன் டன் சரக்கு பெட்டகங்களை கையாண்டு சாதனை!!

வெள்ளி 14, மே 2021 11:35:27 AM (IST)

கரோனா பாதிப்பு காலகட்டத்திலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம்; 2020-21 நிதியாண்டில் 31.79 மில்லியன் டன் சரக்குகளையும், 7.62 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டுள்ளது.

இது தொடர்பாக துறைமுக சபை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு 2020-21-ல் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளை விட 11.89 சதவிகிதம் விழுக்காடு குறைவாகும். இறக்குமதியை பொருத்தவரையில் 22.53 மில்லியன் டன்களும் (70.86%), ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.18 மில்லியன் டன்களும் (28.90%) சதவிகிதமும், சரக்குபரிமாற்றம் 0.08 மில்லியன் டன் (0.24%) சதவிகிதமும் கையாண்டுள்ளது.

மேலும் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2020-21 நிதியாண்டில் 7.62 இலட்சம் டி.இ.யுக்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 டி.இ.யுக்களை ஒப்பிடுகையில் 5.22 % குறைவாகும். கரோனா தொற்று உலமெங்கும் விநியோக சங்கலி, கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களில் ஏற்படுத்திய நெருக்கத்தினால் 2020-21 நிதியாண்டில் துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் 2019-20 நிதியாண்டை விட குறைவாக இருந்தாலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மேம்பட்ட சரக்கு கையாளும் திறனின் மூலம் சரக்கு கையாளுவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2020-21 நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 549.51 கோடி (2019-20 நிதியாண்டு இயக்க வருவாய் ரூபாய் 582.90 கோடி) ஆகும். 2020-21 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 322.63 கோடி (2019-20 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூபாய் 328.71 கோடி) ஆகும். 2020-21 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 113.72 கோடி (2019-20 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 135.23 கோடி) ஆகும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூபாய் 64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம்-3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி துவக்கப்படும் தருவாயில் உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 49மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் (தற்போது 48மீட்டர் நீளம் மற்றும் 310 மீட்டர் அகலம்) கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவுவாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூபாய் 15.24 கோடி செலவில் துறைமுகம் செயல்படுத்த உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களின் போக்குவரத்தின் அதிகரிப்பு அவசியத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது சரக்குபெட்டக முனையம் பொது தனியார் கூட்டமைப்பின்கீழ் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எளிமையான வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியாக ஒரு மணி நேரத்தி;ல் 100 சரக்குபெட்டக வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதி ரூபாய் 47 கோடி செலவில் நிறுவும்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

எண்ணெய் மற்றும் பாதுகாப்பு இயக்குநர் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி எரிவாயு மற்றும் எரிப்பொருள் தயாரிப்புகளை பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்யும் வண்ணம் தீயணைப்பான் அமைப்பு ரூபாய் 17.50 கோடி திட்டமதீப்பில் செயல்படுத்த உள்ளது.

அனைத்து பெருந்துறைமுகங்களுக்கும் முன் மாதிரியாக திகழும் வண்ணம் பசுமை ஆற்றல் திட்டத்தை செயல்படுத்தி இந்திய பெருந்துறைமுகங்களில் முதல் பசுமை துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விரைவில் திகழ உள்ளது. இதன்படி 5 மெகாவாட் தரை சார்ந்த சூரியமின் சக்தி ஆலை ரூபாய் 19.81 கோடி செலவில் நிறுவ உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை சூரியமின்சக்தி ஆலைகள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மற்றொரு 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூறை எரிசக்தி திட்டமானது விரைவில் நிறுவப்பட உள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடல் மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

துறைமுகத்தில் தொழிற்சாலைகள் அமைய பெறுவதற்கு 2000 ஏக்கர் நிலப்பகுதியை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக 334.30 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டதில் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளன.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், கோவிட்-19 தொற்று உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டுருக்கும் இத்தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார். வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

kumaranமே 26, 2021 - 11:15:33 AM | Posted IP 173.2*****

valthukal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory