» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க நடவடிக்கை - அமைச்சரிடம் கோரிக்கை!
வியாழன் 13, மே 2021 3:14:39 PM (IST)
தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர், அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சியில் மேட்டுப்பட்டி சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் இது பயன்பாட்டிற்கு வராமலும், செயல்படாமலும் உள்ளது.
தற்பொழுது கொரானோ நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் சூழ்நிலையில் மையவாடி எரிவாயு தகன மேடையில் வரிசையில் காத்திருந்து இறந்தவர்களை எரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஆகவே மேட்டுப்பட்டி சுடுகாடு எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க அமைச்சர் ஆணையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புமே 23, 2021 - 09:44:25 PM | Posted IP 108.1*****