» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:51:14 AM (IST)



ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா மற்றும் குழுவினர் திருப்பதியில் இருந்து புறப்பட்டு திருத்தணி சென்றனர்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர், இணை ஆணையர் ஜானகி, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

கோவில் அருகில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு பிரசாதம், பூ, பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை திருப்பதி தேவஸ்தான அதிகாரி முத்தாடா.ரவிச்சந்திரா மற்றும் குழுவினர் தங்களின் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர். பட்டு வஸ்திரங்களை சுப்பிரமணியசாமி கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பெற்று முருகனுக்கு அணிவித்தனர்.

இதையடுத்து முத்தாடா. ரவிச்சந்திரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory