» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து நாளை (ஆகஸ்ட் 8) அதிகாலை 5.50 மணிக்குக் கிளம்பும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும். இந்த ரயில் கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய நிலையங்களுக்குச் செல்லாது.
நாகர்கோவில் – லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (16352):
நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்குக் கிளம்பும் மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திண்டுக்கல் நிலையத்திற்குச் செல்லாது.
குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128):
குருவாயூரில் இருந்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 11.15 மணிக்குக் கிளம்பும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரயில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களுக்குச் செல்லாது.
நாகர்கோவில் – காச்சிகுடா எக்ஸ்பிரஸ் (16354):
நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 9.25 மணிக்குக் கிளம்பும் தெலங்கானா மாநிலம் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய நிலையங்களுக்குச் செல்லாது. ரயில் பயணிகள் இம்மாற்றங்களைக் கவனித்துத் தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








