» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இருவருக்கும் நடந்த உரையாடலின்போது ‘நல்லா போயிட்டு இருக்கு சார்’ என்று விஜய் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் நெருங்கிய நட்பு உண்டு. விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, முதல் மாநாடு நடத்திய போதே, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அந்த மாநாட்டை தொலைக்காட்சி வழியாக பார்த்து, அந்தப் படத்தை ஊடகங்களுக்கு அனுப்பினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமி இருந்தாலும் முதல்வர் விஜய்யுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார்.இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் இருந்து போனில் வாழ்த்து தெரிவித்து விட்டு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அதையடுத்து முதல்வர் விஜய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.
அப்போது, ரங்கசாமி, "நன்றி, நல்லா போய்ட்டு இருக்கா” என்று கேட்டார். அதற்கு தமிழக முதல்வர் விஜய், "நல்லா போயிட்டு இருக்கு சார்” என்றார். உடனே முதல்வர் ரங்கசாமி, "நல்லா பண்ணுங்க; நேரில் வந்து பார்க்கிறேன்.. நல்லா இருங்க” என்றார். அதற்கு விஜய், ‘சரிங்க சார்’ என்று குறிப்பிட்டார். இரு மாநில முதல்வர்களும் உற்சாகமாக உரையாடிக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








