» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைமையிலான் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.ஏற்கெனவே, ரூ. 75,000 வரை பயிா்க் கடன்கள் தள்ளுபடி, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வா் விஜய் அறிவித்தாா். இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தப்படும்; ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படும்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி, திருமணத்துக்கு 1 பவுன் தங்கம், ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் உள்ளிட்ட தவெக தோ்தல் வாக்குறுதிகளின் அமலாக்கம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








