» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

AssemblyTn.jpg

தமிழ்நாட்டில் சுரங்கக் குத்தகையில் அனுமதிக்கப்பட்ட கனிமங்களுடன், அதிக மதிப்புள்ள வேறு கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி அவற்றை விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் சிறு கனிமச் சலுகை விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து அரசிதழ் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ், தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள், 1959-ல் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது.

அதன்படி, கட்டிடம் மற்றும் சாலை அமைக்கும் பொருட்களுக்கான கற்கள் தொடர்பான பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்றிருந்த 'கிரானைட் அல்லாத கற்கள்' என்ற வகைப்பாட்டிற்குப் பதிலாக, பின்வரும் பொருட்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன:

இயற்கையாகச் சிதைந்த கருங்கல்

கல் துண்டுகள் மற்றும் பெரிய பாறைக்கற்கள்

உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள்

மெட்டல் ஜல்லி மற்றும் சாலை அமைப்பதற்கான கற்கள்

கனிமப் பரிசோதனை & விற்பனை நடைமுறை: சுரங்கக் குத்தகைதாரர் ஒருவர் தனது அனுமதிக்கப்பட்ட சுரங்கப் பகுதியில் கிடைக்கும் 'இயற்கையாகச் சிதைந்த கருங்கல்லை' விற்பனை செய்ய விரும்பினால், அதுகுறித்த அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையில், அந்தச் சிதைந்த கருங்கல்லில் என்னென்ன கனிமங்கள் உள்ளன என்பதைப் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகத்தின் ஆய்வகத்தில் மாதிரிப் பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனையில் அதிக மதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், சட்ட விதிகளின்படி அந்தக் கனிமங்களை விற்பனை செய்ய வேண்டும்.

அதேபோன்று, அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட வேறு கனிமங்கள் இருப்பது தெரியவந்தால், அவற்றுக்கான கூடுதல் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், அதை இயற்கையாகச் சிதைந்த கருங்கல்லாகவே விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்படும். இதற்கான சட்டத் திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory