» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட "173(2) FIR உங்கள் உரிமை" திட்டத்தின் மூலம் இதுவரை 3,460 புகார்தாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று இலவசமாக FIR நகல்கள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் IPS கடந்த ஜனவரி 26-ஆம் தேதி "173(2) FIR உங்கள் உரிமை" என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுவாகக் காவல் நிலையங்களில் புகார் அளித்த பிறகு, அதன் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகலைப் பெறப் புகார்தாரர்கள் பலமுறை காவல் நிலையத்திற்கு அலைக்கழிக்கப்படும் நிலை இருந்து வந்தது. இந்த அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 3,460 புகார்தாரர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று இலவசமாக FIR நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊர்க்காவல் படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையப் போலிஸார் மூலமாகக் நேரடியாகப் புகார்தாரர்களின் வீடுகளுக்கே சென்று இந்த நகல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
காவல்துறையினரின் இந்த அதிரடி மற்றும் வேகமான நடவடிக்கையால் புகார்தாரர்களின் தேவையற்ற அலைக்கழிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும், காவல்துறையினர் மீதான நம்பிக்கையும் மதிப்பும் மக்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








